பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு கூட்டம்
பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
கரூர் மாவட்ட தந்தை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் தாந்தோணிமலையில் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட காப்பாளர் ராஜு, வக்கீல் குடியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் தி.க. மாவட்ட தலைவர் தனபால் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பெரியார் பிறந்தநாளன்று திருமாநிலையூரில் உள்ள பெரியார் சிலை, லைட் ஹவுஸ் பகுதியில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவிப்பது, கரூர் ஜவகர் பஜாரில் இருந்து கோவை ரோடு வழியாக ஊர்வலமாக செல்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.