செந்துறை போலீஸ் நிலையம் முன்பு மயங்கி விழுந்தவரால் பரபரப்பு
மது போதையில் செந்துறை போலீஸ் நிலையம் முன்பு மயங்கி விழுந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை போலீஸ் நிலையம் முன்பு ஒருவர் மதுபோதையில் கையில் 4 மதுபாட்டில்களுடன் தள்ளாடிய படியே வந்து உள்ளார். அப்போது அவர் திடீரென்று கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனைக்கண்ட போலீசார் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கி விழுந்த நிலையிலும் அந்த நபர் கையில் வைத்திருந்த மதுபாட்டில்களை விடாமல் பிடித்து இருந்தது அங்கே இருந்தவர்களை ஆச்சரியம் அடைய செய்தது.