செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-09 08:15 GMT

கரூர்,

சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 3வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கரூர் ராம்நகரில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2 கார்களில் வந்த 8-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  அவரது வீட்டில் வேலை செய்து வரும் ஊழியர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில் அவரது சகோதரர் அசோக் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்