செந்தில் பாலாஜி சகோதரர் மனைவி நிர்மலாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்...!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக்குமாரின் மனைவி நிர்மலாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Update: 2023-08-09 11:30 GMT

சென்னை,

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார், அவரது மனைவி நிர்மலா பெயரில் கட்டி வரும் பிரமாண்ட பங்களா வீட்டில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இரண்டு வாகனங்களில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கினர்.

சோதனை நடைபெற்ற நிலையில், இந்த பங்களா வீடு கட்டுவது தொடர்பான ஆவணங்களுடன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அசோக் குமார் மனைவி நிர்மலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கரூர் புறவழிச் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பங்களா வீடு தொடர்பான ஆவணங்களுடன் அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நிர்மலாவின் பெயரைக் குறிப்பிட்டு அமலாக்கத் துறை நோட்டீஸ் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்