சென்னையில் பிரபல தியேட்டரில் பரபரப்பு சம்பவம் - தீயாய் பரவும் வீடியோ

2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க மறுத்த ஊழியரிடம், இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது.

Update: 2023-05-25 09:33 GMT

சென்னை மதுரவாயலில் உள்ள பிரபல திரையரங்கில், டிக்கெட் பெற 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க மறுத்த ஊழியரிடம், இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது.

போரூரை சேர்ந்த கோதண்டராமன் என்பவர் தனது நண்பர்களுடன், மதுரவாயலில் உள்ள பிரபல திரையரங்கில் 'பிச்சைக்காரன் 2' படம் பார்க்க சென்றார். அப்போது மூன்று டிக்கெட்டுகள் பெற, கவுன்டரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை தந்தபோது, அதை ஊழியர்கள் வாங்க மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர் திரையரங்க ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்...

Tags:    

மேலும் செய்திகள்