செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடக்கிறது.

Update: 2023-04-12 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இன்று ( வியாழக்கிழமை), 9-ம் நாள் கம்மவார் சங்கம் சார்பில் 48-ம் ஆண்டு தேர் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு காலை 7.31 மணிக்கு ரதாரோகரம் பூஜை நடைபெறுகிறது. 8.15 மணிக்கு கதிரேசன் கோவில் ரோடு கம்மவார் திருமண மண்டபத்தில் இருந்து தேர்வடம்பிடிக்க செண்ட மேளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது.

காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கம்மவார் சங்க தலைவர் ரீஜென்ட் எஸ்.ஹரிபாலகன் தலைமையில் செயலாளர் எம்.அழகர்சாமி, பொருளாளர் என்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்