நீர் மேலாண்மை கருத்தரங்கு

சாத்தனூர் அணையில் நீர் மேலாண்மை கருத்தரங்கு நடந்தது.

Update: 2023-07-13 17:16 GMT

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணையில் ஜல்சக்தி அமைச்சகம், நீர்வளம் நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறை, மத்திய நீர் ஆணையம் சார்பில் 75-வது சுதந்திர திருநாள் அமுது திருவிழா, சுற்றுலா மேம்படுத்தும் விழா, நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு, மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது.

மருத்துவர் அணி மாநில துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., மத்திய பெண்ணையாறு வடிநிலை கோட்டம் சண்முகம், ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், பொறியாளர் சுரேஷ், மத்திய நீர் ஆணையம் கோவை தலைமை பொறியாளர் சிவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் தெற்கு மண்டலம் சென்னை தலைமை இயக்குனர் தங்கமணி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பேசினார்.

அதைத்தொடர்ந்து நீர் மேலாண்மை குறித்த போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பிச்சாண்டி .டாக்டர் எ.வ.வே.கம்பன் அண்ணாதுரை எம்பி, கிரி எம் எல் ஏ ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கோ.ரமேஷ், ஏ.கோவிந்தன், பாசன சங்கத்தலைவர் ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் கே.பி.ஆர்.ரமேஷ், கால்வாய் பாசன சங்க தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி செயற்பொறியாளர் அறிவழகன் நன்றி கூறினார்.

சுற்றுலா பயணிகள் கவரும் வண்ணம் 9 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்