தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கு

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கு நடக்கிறது. இந்த கருத்தரங்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.

Update: 2022-05-26 17:56 GMT

திருவாரூர்:

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கு நடக்கிறது. இந்த கருத்தரங்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.

தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கு

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறும் தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கம் தொடர்பாக துணைவேந்தர் கிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை(அதாவது இன்று) நடைபெறும் தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். மேலும் நாடு முழுவதும் உள்ள 38 மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் என்.ஐ.டி. இயக்குனர்கள், ஐ.ஐ.டி. இயக்குனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தமிழில் தேர்வு எழுத அனுமதி

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 24 துறைகளும், 64 படிப்புகளும் உள்ளன. இதற்கான நுழைவு தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டு நடைபெற உள்ளது. எனவே மாணவர்கள் இந்த நுழைவு தேர்வினை நல்ல முறையில் எழுதி மத்திய பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும். நான் பொறுப்பு ஏற்ற பிறகு தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.

டெல்டா பகுதியான திருவாரூர் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. எனவே இந்த ஆண்டு விவசாய மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மற்றும் உணவு தொழில்நுட்பம் குறித்த புதிய துறைகள் கொண்டு வரப்பட உள்ளது.

மேலும் கடலோர மாவட்டமாக நாகை உள்ளதால் மரைன் படிப்பு கொண்டு வரப்பட உள்ளது. கோடியக்கரை பறவை சரணாலயம் உள்ளதால், பறவைகள் குறித்த படிப்பும் கொண்டு வரப்படுகிறது.

ஆராய்ச்சி படிப்புகள்

குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இயற்கை பாதிப்பு அதிகமாக இருப்பதால் இயற்கை பேரிடர் மேலாண்மை குறித்து படிப்பு கொண்டு வரப்படும். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியா எவ்வாறு இருந்தது என்பது குறித்த வரலாறுகளை தெரிந்து கொள்வதற்கான ஆராய்ச்சி படிப்புகளும் கொண்டு வரப்படுகிறது.

முதுகலை நுழைவு தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது. இளங்கலை படிப்புக்கான நுழைவுத்தேர்வு கால அவகாசம் நீட்டிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்