கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்

செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.

Update: 2023-08-12 18:33 GMT

பனைக்குளம்.

ராமநாதபுரம் அருகேயுள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி கருத்தரங்க அறையில் தேசிய தர மதிப்பீட்டு குழு தரத்திற்காக நேற்று வருடாந்திர தர உறுதி (ஏ.க்யூ.ஏ.ஆர்) குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஐ.க்யூ.ஏ.சி. பிரிவின் தலைவர் அன்வர் ஷாகின் வரவேற்றார். இதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.இதில் சிறப்பு சொற்பொழிவாளர் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தின் அறிவியல் புல முதன்மையர் சேதுராமன் தொடர்ந்து 3 மணி நேரம் கருத்தரங்கு சிறப்புரை நிகழ்த்தினார். இதில் தரமான கலாசாரம் உருவாக்குதல், ஆசிரியர்கள் குழுப்பணி ஆற்றுதல், தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு மனித சக்தியை வழங்குதல், மாணவர்களிடையே நல்லொழுக்க மதிப்பினை ஏற்படுத்துதல், தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவித்தல், என்ற கருத்துகளை வழங்கி மேலும் வருடாந்திர தர உறுதி செயல்பாட்டை விளக்கினார். முடிவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை உதவி பேராசிரியர் பிரதீப் ராஜேஷ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர்கள் ஜெயச்சந்திரன், சேக் ஐயாஸ் அகமது கல்லூரியின் நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மற்றும் சபியுல்லா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்