கலவை ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு

கலவை ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.

Update: 2023-03-21 17:55 GMT

கலவை

கலவை ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு நடந்தது.

கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் "பாசி உயிரித்தொழில் நுட்பம் மற்றும் காசநோய்" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அ.முகமதுசாதிக் தலைமை தாங்கி பேசினார். துறைத்தலைவர் ஜெயந்தி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக சென்னை கிறிஸ்துவ கல்லூரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துணை தலைவரும் நுண்ணுயிரியல் துறை பேராசிரியருமான பி.ஹனுமந்தராவ் கலந்து கொண்டு பேசினார்.

மேலும் சென்னை காசநோய் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் என்.சரவணன் காசநோயின் தன்மையை பற்றியும், அந்த நோய் பாதித்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்க வழங்கங்கள் பற்றியும் பேசினார். சிறப்பு விருந்தினர்களான இவர்கள் இருவரும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களாவர்.

இதில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கினையொட்டி மாணவர்களுக்கு வரைவு சுவரொட்டி போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் துறையின் உதவி பேராசிரியர் வி.அருண்குமார் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்