சிதம்பரம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருத்தரங்கு

சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2023-04-16 18:45 GMT

அண்ணாமலைநகர், 

சிதம்பரம் அண்ணாமலைநகரில் இயங்கிவரும் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயன்முறை மருத்துவத்துறை சார்பில் கொரோனா பரவலை எதிர்கொள்வது மற்றும் நுரையீரல் மறுவாழ்வு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு மருத்துவப் புல முதல்வர் டாக்டர் திருப்பதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இங்கிலாந்து இயன்முறை டாக்டர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு கொரோனாவால் ஏற்படும் நுரையீரல் பாதிப்புகளுக்கும், நுரையீரலுக்கு மறு வாழ்வு அளிக்கும் முறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளித்து பேசினார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜூனியர் சுந்தரேஷ், மருத்துவ அலுவலர் டாக்டர் பாரி, டாக்டர் ஸ்ரீவித்யா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இயன்முறை மருத்துவ துறைத் தலைவர் ரவிச்சந்திரன் கருத்தரங்கை ஒருங்கிணைத்து நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை இயன்முறை டாக்டர்கள் பாலாஜி, பாலா, மேனகா, பிரசாத் ஆகியோர் செய்திருந்தனர். இதில் நூற்றுக்கணக்கான இயன்முறை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்