தேசிய கருத்தரங்கு, பயிற்சி பட்டறை

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி தேசிய கருத்தரங்கு மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

Update: 2023-03-10 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி தாவரவியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் தாவரவியல் தொழில்முனைவர் நிலையான வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதற்கு தாவரவியல் துறை தலைவர் கோமளவல்லி வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முருகேசன் கருத்தரங்கை தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார்.

புதுக்கோட்டை ஜே.ஜே.கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தாவரவியல் துறை உதவி பேராசிரியர் ஆறுமுகம், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி தாவரவியல் துறை உதவி பேராசிரியர் முருகானந்தம், சிவகாசி காளீஸ்வரி கல்லூரி தாவரவியல் துறை உதவி பேராசிரியர் முருகன், டெல்லி மத்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மகேஷ் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் காளான் வளர்ப்பு, சுருள்பாசி வளர்ப்பு, தாவர மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்டவற்றில் தொழில் முனைவோர்களுக்கான வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை தாவரவியல் துறை உதவி பேராசிரியர்கள் பழனிசாமி, கோபிநாத், கோட்டைச்சாமி, வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்