கருத்தரங்கம்

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி கருத்தரங்கம் நடந்தது

Update: 2023-02-04 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை, தமிழாய்வு மையம் மற்றும் வல்லிக்கண்ணன் இலக்கிய பேரவையுடன் இணைந்து ஒருநாள் தேசிய கருத்தரங்கம் கல்லூரி கனிவேலவன் கலையரங்கத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் இரா.சின்னத்தாய் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் திருநாவுக்கரசு வரவேற்றார். வல்லிக்கண்ணன் இலக்கிய பேரவை தலைவர் சு.நயினார் வாழ்த்துரை வழங்கினார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், கேரள பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் ப.ஜெயகிருஷ்ணன், மதுரை தியாகராஜர் அரசு கலைக்கல்லூரி இணைப்பேராசிரியர் சு.காந்திதுரை, கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் கோ. சந்தனமாரியம்மாள் ஆகியோர் பேசினர்.

தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பெர்க்மான்ஸ் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்