சிவகாசி,
விருதுநகர் மாவட்ட மாணவர் அறிவியல் பேரவை சார்பில் சிவகாசி ஆர்.எஸ்.ஆர். பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான செயல்திட்டம் தொடர்பான அறிவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் சண்முகையாரெட்டியார் தலைமை தாங்கினார். விண்வெளி அறிவியல் ஆசிரியை லிகிமிராண்டா, வித்யார்த்தி விஞ்ஞான மாந்தனின் ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், பிரபாகரன், மாணவர் அறிவியல் மன்றத்தின் நிறுவனர் வாசன், பள்ளியின் முதல்வர் முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆள் இல்லாத குட்டி விமானங்களின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.