ரூ.8 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.8 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

Update: 2023-01-11 18:45 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று பருத்தி சந்தை நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் மற்றும் விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 118 விவசாயிகள் 350 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வந்தனர். இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், விழுப்புரம், பண்ருட்டி, கும்பகோணம், சங்ககிரி, ஆத்தூர், கொங்கணாபுரம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர். இதில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.9078-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 6,918-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக 5,638-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4,399-க்கு விற்பனையானது. இதன் மூலம் மொத்தம் ரூ.7 லட்சத்து 90 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது மேலும் இந்த வாரச்சந்தை வருகிற ஜூன் மாதம் வரை வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் என கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்