சுய உதவி குழுக்கள் பயன்பெற மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

Update: 2022-08-05 03:30 GMT

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் பயன்பெற பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தில் பங்குபெற விருப்பமுள்ள தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு உதவி புரிந்திட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஒருங்கிணைப்பாளர்கள், குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், அதற்கான வங்கிக்கடன் பெற்றிட உதவுதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இவர்களுக்கு திட்டத்தின் விதிமுறைகளின்படி திட்ட அறிக்கைக்கான கடன் ஒப்புதல் பெறப்பட்டதும் ரூ.10 ஆயிரம் முதல் தவணையாகவும், வணிக ரீதியான உற்பத்தி துவங்கப்பட்டதும் இரண்டாவது தவணையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை tn.pmfme@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும். 16-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்