சுய பாதுகாப்பு செயல்முறை விளக்கம்
ஸ்ரீமுஷ்ணத்தில் சுய பாதுகாப்பு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆயங்குடி வட்டார அளவிலான யானைக்கால் நோய் மேலாண்மை மற்றும் சுய பாதுகாப்பு செயல்முறை விளக்க பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைமை மருத்துவ அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கடலூர் சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் அலுவலக இளநிலை பூச்சியாளர் மூர்த்தி கலந்து கொண்டு செயல்முறை விளக்க பயிற்சி அளித்தார். இதில் அன்பரசன், ராஜ்மோகன், செந்தில், செந்தமிழ் செல்வன், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 37 பேருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.