திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு

திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு 2 நாட்கள் நடக்கிறது

Update: 2022-07-21 18:40 GMT

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடக்கிறது. இதில் திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 14, 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேர்வு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு, ஆம்பூர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்து கொள்பவர்கள் 1.9.2008 அன்றோ அதற்குப் பிறகோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கலந்து கொள்பவர்கள் 1.9.2006 அன்றோ, அதற்குப் பிறகு பிறந்தவர்களாகவோ இருக்க வேண்டும்.

அதனை தொடர்ந்து 19 வயதுக்குட்பட்ட அணிகள் தேர்வு முகாம் மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு திருப்பத்தூர் ஓய்.எம்.சி.ஏ. மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இந்த கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள வருபவர்கள் பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும். தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள மாநில கிரிக்கெட் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்