அரசு மாதிரி பள்ளி கட்டிடம் கட்ட இடம் தேர்வு

விக்கிரவாண்டியில் அரசு மாதிரி பள்ளி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை புகழேந்தி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தாா்.

Update: 2023-07-14 18:45 GMT

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி தொகுதியில் அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவர் விடுதி, மாணவியர் விடுதியுடன் கட்ட தமிழக அரசு ரூ.54 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பள்ளிக்கான கட்டிடத்தை விக்கிரவாண்டியில் குத்தாம்பூண்டி சாலையில் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை புகழேந்தி எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, தாசில்தார் ஆதி சக்தி சிவக்குமரி மன்னன், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், கிராம நிர்வாக அலுவலர். ஸ்ரீதர், பேரூராட்சி தலைவர்அப்துல் சலாம், துணை தலைவர் பாலாஜி, நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, மாவட்ட தலைவர் பாபு ஜீவானந்தம், தி.மு.க. நகர செயலாளர் நைனா முகமது, இளைஞர் அணி செயலாளர் கார்த்திக், மாணவரணி சபியுல்லா, அசோக், சங்கர் ராம்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்