திருப்பத்தூர் மாவட்டமகளிர் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு
திருப்பத்தூர் மாவட்டமகளிர் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு 14-ந் தேதி நடக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டமகளிர் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு 14-ந் தேதி நடக்கிறது.
திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் மற்றும் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மகளிருக்கான 13 முதல் 24 வயது வரையிலான இளம் விளையாட்டு வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து மாநில மற்றும் தேசிய அளவில் பங்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தை சார்ந்த வீராங்கனைக்களுக்கு வருகிற 14-ந் தேதி மாவட்ட அணி தேர்வு முகாம் ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இதில் பங்கு பெறுவதற்கான விண்ணப்பங்களை சங்க அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.