ஓசூரில் இருந்து பெங்களூருவுக்குஅதிக பாரம் ஏற்றிச்சென்ற 7 லாரிகள் பறிமுதல்
ஓசூர்
ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், ஓசூர் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஓசூரில் இருந்து எம்.சாண்ட் மற்றும் ஜல்லிகற்கள் பாரம் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சென்ற 7 லாரிகளை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த லாரிகள் அதிக பாரம் ஏற்றிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த 7 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 7 லாரிகளுக்கும் ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது.