காரில் கடத்திய புகையிலை பறிமுதல்

காரில் கடத்திய புகையிலை பறிமுதல்

Update: 2023-06-10 18:45 GMT

சிவகாசி

சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் போலீசாரின் தீவிர ரோந்துபணி காரணமாக புகையிலை பொருட்கள் விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது போலீசாரின் ரோந்து பணி இல்லாத நிலையில் புகையிலை பொருட்கள் அதிக அளவில் பெட்டி கடைகளில் கூட விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் நகரின் பல்வேறு பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருத்தங்கல் முத்துமாரி நகர் பகுதியில் போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் இருந்த ரூ.67 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் காரை ஓட்டி வந்த சாத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 36) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்