புகையிலை பொருட்கள் பறிமுதல்

பணகுடி அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-16 20:04 GMT

பணகுடி:

பணகுடியை அடுத்த புண்ணியவாளன்புரத்தை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 55). இவர் குளிர்பான கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வதாஸ் சோதனை நடத்தினார். அப்போது அங்கு ஒரு பையில் இருந்த 25 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, பொன்ராஜை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்