மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
மணல் அள்ளிய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போடி தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போடி அருகே உள்ள டி.புதுக்கோட்டை பகுதியில் வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்தது தெரியவந்தது. இதற்கிடையே போலீசாரை கண்டதும் டிராக்டரை ஓட்டி வந்தவர் தப்பி ஓடி விட்டார். விசாரணையில் அவர், டி.புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 40) என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சிவக்குமாரை கைது செய்தனர்.