மணல் கடத்திய டிராக்டர், பொக்லைன் எந்திரம் பறிமுதல்
பேரணாம்பட்டு அருகே மணல் கடத்திய டிராக்டர், பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே உள்ள குடியாத்தம் - மேல்பட்டி சாலையில் குடியாத்தம் தாசில்தார் லலிதா தலைமையில் வருவாய் ஆய்வாளர் சுகந்தி மற்றும் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கீழ்ப்பட்டி இந்திரா நகர் பகுதியிலிருந்து மணல் கடத்தி வந்த ஒரு டிராக்டர் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரத்தை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர்கள் உள்பட 3 பேர் தப்பி ஏடிவிட்டனர்.
அதைத்தொடர்ந்து டிராக்டர் மற்றும் பொொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து மேல் பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.