பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-01-21 19:14 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. மல்லாங்கிணறு பஜார், அய்யன் ரெட்டியபட்டி விலக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் 10 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கேரி பைகள் மற்றும் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து மல்லாங்கிணறு பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் கூறுகையில், கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளதா என ஆய்வு தொடர்ந்து நடைபெறும். எனவே கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்றார்.

ஆய்வின் போது வட்டார சுகாதார ஆய்வாளர்கள் கருப்பையா, பிச்சை நாகராஜ், பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்