சந்தன கட்டைகளுடன் மோட்டார் சைக்கிள் பறிமுதல்

சந்தன கட்டைகளுடன் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-11-23 17:49 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை ஆற்காடு அடுத்த காவனூர் கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டனர். அதில் வந்த நபர்கள் நிற்காமல் சென்று விட்டனர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர்.

இதனால் கென்னடிபாளையம் செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையை சோதனை செய்தனர். அப்போது சுமார் 15 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகள் இருப்பது தெரியவந்தது. மோட்டார் சைக்கிள் மற்றும் சந்தன கட்டைகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்