மணல் கடத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல்
மணல் கடத்திய தேமாட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
மணல் கடத்திய தேமாட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் பொய்கை பாலாற்றங்கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பிளாஸ்டிக் மூட்டைகள் அடுக்கி வைத்தப்படி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனையிட முயன்றனர். போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் சாலையோரம் நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பிளாஸ்டிக் மூட்டைகளை திறந்து பார்த்தனர். அதில், மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 5 மணல் மூட்டைகளுடன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய நபரை தேடி வருகிறார்கள்.