இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-09-08 16:59 GMT

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேதாளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக, "ஐஸ் போதைப்பொருள்" பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சோதனை செய்தபோது, ஆறு கிலோ எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது.

இதன் மதிப்பு, 20 கோடி ரூபாய் என தெரிவித்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்த நிலையில், வேதாளை பகுதியை சேர்ந்த சக்திவேல் மற்றும் நாக குமார் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.Full View

Tags:    

மேலும் செய்திகள்