9 தனியார் பஸ்களில் 'ஏர்ஹாரன்' பறிமுதல்

விருத்தாசலம், காட்டுமன்னார்கோவிலில் 9 தனியார் பஸ்களில் ‘ஏர்ஹாரன்’ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பஸ் உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-07-05 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் பாலக்கரையில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 5 தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய 'ஏர்ஹாரன்' பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 தனியார் பஸ் உரிமையாளருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஏர் ஹாரன் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல்-அபராதம்

காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் பஸ்நிலைய ரோட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் 4 தனியார் பஸ்கள் அதிக ஒலி எழுப்பும் 'ஏர்ஹாரனை' அடித்தபடி வந்தன. இதை பார்த்த போலீசார் அந்த தனியார் பஸ்களை நிறுத்தி அதில் பொருத்தப்பட்டு இருந்த ஏர்ஹாரனை பறிமுதல் செய்தனர். மேலும் மோட்டார் வாகன சட்டத்தின் படி 4 தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்