1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஜோலார்பேட்டை பகுதியில் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை ஜே.என்.ஆர். நகர் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். ஓரிடத்தில் 30 பைகளில 1½ டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசியை பதுக்கியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை திருப்பத்தூர் உணவுப் பாதுகாப்பு கிடங்கில் ஒப்படைத்தனர்.