மண் கடத்திய பொக்லைன் எந்திரம், 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

மண் கடத்திய பொக்லைன் எந்திரம், 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-04-29 18:22 GMT

திருவலம்

மண் கடத்திய பொக்லைன் எந்திரம், 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காட்பாடியை அடுத்த திருவலம் ஏரியில் மண் கடத்துவதாக வேலூர் உதவி கலெக்டர் கவிதாவுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான வருவாய்த் துறையினர் திருவலம் ஏரியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மண் கடத்திக் கொண்டிருந்தவர்களை பிடிக்க முயன்றனர். உடனடியாக வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் லாரியை சோதனை செய்ததில் 5 யூனிட் மண் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மற்றும் 2 டிப்பர் லாரிகளை உதவி கலெக்டர் பறிமுதல் செய்து திருவலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

மேலும் இதுசம்பந்தமாக வருவாய் துறையினர் கொடுத்த புகாரின் பேரில் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் என 6 பேர் மீது ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்