மாரண்டஅள்ளியில் கேட்பாரற்று நின்ற 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Update: 2022-11-30 18:45 GMT

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி கணபதிநகர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள காங்கி கரை பகுதியில் 12 மோட்டார் சைக்கிள்கள் கேட்பாரற்று நின்றன. இதுகுறித்து போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் மோட்டார் சைக்கிள்கள் யாருடையது? என கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து 12 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள்கள் குற்ற செயல்களில் தொடர்புடையதா? அல்லது சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்களுடையதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்