நாமக்கல் அருகே 1,450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்-வாலிபர் கைது

நாமக்கல் அருகே முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 1,450 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.

Update: 2022-06-06 16:09 GMT

நாமக்கல்:

1,450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் நாமக்கல் அருகே உள்ள வையப்பமலை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் முட்புதரில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 23 பிளாஸ்டிக் சாக்குகளில் வைக்கப்பட்டு இருந்த 1,450 கிலோ ரேஷன்அரிசியை பறிமுதல் செய்தனர்.

வாலிபர் கைது

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருச்செங்கோடு தாலுகா அரசம்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 29) என்பவர் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்தப்பட்ட மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட சதீஷ்குமாரை குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு விஸ்வநாதன், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சதீஷ்குமார் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்