விதைப்பந்து நடும் நிகழ்ச்சி

பழனியாண்டவர் பெண்கள் கல்லூரியில் விதைப்பந்து கடும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-02-28 13:49 GMT

பழனியில் உள்ள பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில், சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் 6 மாவட்டங்களுக்கு விதைகளை பரவச்செய்தல், காடுகளை உருவாக்குதல் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளரும், கோவில் இணை ஆணையருமான நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

சுற்றுச்சூழல் காப்போம், மரம் வளர்ப்போம் என்ற உறுதி மொழியை தமிழ்த்துறை தலைவர் வாசுகி வாசிக்க, விதைப்பந்துகளை கையில் ஏந்திய மாணவிகள் உறுதி எடுத்து கொண்டனர். இந்த விதைப்பந்தில் வேப்பமரம், புளியமரம், அரசமரம் என பல்வேறு வகையான மரங்களின் விதைகள் உள்ளன. இந்த விதை பந்துகளை ஏரிகள், நீர்நிலைகள், வீடுகளுக்கு அருகில் நட்டு மரங்களை உருவாக்க கல்லூரி மாணவிகள் உறுதியேற்றனர்.

ஒரே இடத்தில் கல்லூரி மாணவிகள் 2,500 பேர் கலந்து கொண்டு விதைப்பந்துகளை உருவாக்கி சாதனையில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்