செபஸ்தியார் ஆலய தேர் பவனி திருவிழா
வெள்ளாளன்கோட்டையில் செபஸ்தியார் ஆலய தேர் பவனி திருவிழா நடைபெற்றது.
கயத்தாறு:
கயத்தாறில் அருகே வெள்ளாளன்கோட்டை கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலயத்தின் 212-வது ஆண்டு திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலையில் இறை மக்களின் மகிமை, கொடிமரம் நடுதல், கொடியேற்றுதல், திருப்பலி, நற்கருணை, நவநாள், ஜெயமாலை, புனிதரின் திரு உருவப் பணி ஊர்வலம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று பத்தாம் திருவிழாவை முன்னிட்டு கயத்தாறு பங்குத்தந்தை எரிக்ஜோ தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை 6 மணிக்கு தேர்பவனி தொடங்கியது.
முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மதியம் ஒரு 1 மணிக்கு ஆலயம் முன்பு வந்து சேர்ந்தது. வழிநெடுக குவிந்திருந்த பக்தர்கள் உப்பு, மிளகு மாலை அணிவித்து வழிபாடு நடத்தினர்.