ரூ.24 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம்

Update: 2023-06-01 12:26 GMT


வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது. இதில் இடையகோட்டை, வலையபட்டி, பாலா காட்டூர், களத்துப்பட்டி, அழகாபுரி, பஞ்சப்பட்டி, எலப்பட்டி பகுதியைச் சேர்ந்த 78 விவசாயிகள் 1,156 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர் காங்கயம், முத்தூர், பூனாட்சி, சித்தோடு, காரமடை, நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். நல்ல தரமான சூரியகாந்தி விதைகள் ரூ.47.17-க்கும், இரண்டாம் தரமான சூரியன் விதைகள் ரூ.44.16-க்கும் ஏலம் எடுத்தனர். இவற்றின் மொத்தம மதிப்பு 24 லட்சத்து 14 ஆயிரத்து 702 ஆகும்.

இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சி மகுடேஸ்வரன் தெரிவித்தார்

மேலும் செய்திகள்