சீமான் உருவப்படம் எரிப்பு; 6 பேர் கைது

தென்காசியில் சீமான் உருவப்படத்தை எரித்ததாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-20 18:45 GMT

நாம் தமிழர் கட்சி நிறுவன தலைவர் சீமான் அருந்ததியினர் சமுதாயத்தினரை அவதூறாக பேசியதாக கூறி திராவிட தமிழர் கட்சியினர் நேற்று தென்காசி புதிய பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சீமானின் உருவ பொம்மையை தீ வைத்து எரிக்க முயற்சி செய்தனர். இதனைப் பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களிடம் இருந்து உருவ பொம்மை பறித்துச் சென்றனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீமானின் உருவப்படத்தை தீ வைத்து எரித்தனர். இதைத் தொடர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் கரு.வீரபாண்டியன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்