அனுமதியின்றி இயங்கிய பாருக்கு சீல்

வாணியம்பாடியில் அனுமதியின்றி இயங்கிய பாருக்கு சீல் வைக்கப்பட்டது.;

Update: 2023-05-25 18:38 GMT

வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோட்டில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடை பின்புறமாக அனுமதியின்றி பார் இயங்கி வருவதாகவும், அங்கு மது அருந்திவிட்டு மதுப்பிரியர்கள் அட்டகாசம் செய்து வருவதாகவும் திருப்பத்தூர் மாவட்டம் கலால் உதவி ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கலால் உதவி ஆணையர் பானுமதி தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.அதிகாரிகள் வருவதை அறிந்ததும் அவசர அவசரமாக அங்கிருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் பார் இயங்கி வந்ததற்கான அனைத்து பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடப்பதை கண்டறிந்து பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பார் பெயர் அச்சடிக்கப்பட்ட பேனர்களை கிழித்து ஏறிந்தனர். மேலும் அங்கு பார் நடத்திவந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக் பார் நடைபெறும் இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் போலீஸ் செக்போஸ்ட் மற்றும் தினமும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்