பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சேலம் அலுவலகத்திற்கு சீல் வைப்பு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சேலம் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. அந்த அமைப்பின் சேலம் மாவட்ட அலுவலகம் செவ்வாய்பேட்டை பகுதியில் அப்சரா இறக்கம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இதையடுத்து சேலம் டவுன் தாசில்தார் செம்மலை, போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் நேற்று அங்கு சென்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். அதாவது, சீல் வைப்பதற்கு முன்னதாக அலுவலகத்திற்குள் இருந்த புத்தகங்கள் மற்றும் இதர பொருட்கள் எவை? என்பது குறித்து அதிகாரிகள் எழுதி வைத்துக்கொண்டனர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.