ஆழ்துளை கிணறுகளுக்கு 'சீல்' வைப்பு
கோரம்பள்ளம் பகுதியில் ஆழ்துளை கிணறுகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது
கோரம்பள்ளம், முள்ளக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீரை ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுத்து விற்பனை செய்யப்படுவதாக, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் அப்பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் கோரம்பள்ளம், முள்ளக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள 6 இடங்களில் உரிய அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து நெல்லையை சேர்ந்த நிலத்தடி நீர் பிரிவு உதவி புவியியலாளர் ஜெயரஞ்சிதம் தலைமையிலான அலுவலர்கள், இந்த 6 ஆழ்துளை கிணறுகளையும் மூடி சீல் வைத்தனர்.