திருச்சி வரகனேரியில் குளிர்பான நிறுவனத்துக்கு `சீல்'

திருச்சி வரகனேரியில் குளிர்பான நிறுவனத்துக்கு `சீல்' வைக்கப்பட்டது.

Update: 2022-06-22 19:50 GMT


திருச்சி வரகனேரியில் குளிர்பான நிறுவனத்துக்கு `சீல்' வைக்கப்பட்டது.

ஆய்வு

திருச்சி வரகனேரி பகுதியில் உள்ள குளிர்பான நிறுவனத்தை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த நிறுவனம் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்ததாலும், வேறு நிறுவனத்தின் பெயரில் உள்ள பாட்டில்களில் குளிர்பானங்கள் தயாரிக்கப்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது. அங்கு இருந்த 4,790 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அந்த நிறுவனத்துக்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.

காலாவதி தேதி

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குளிர்பான நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் குளிர்பான பாட்டில்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி அழியாத மையினால் அச்சிட வேண்டும். சுத்தமான சுகாதாரமுறையில் குளிர்பானங்களை தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்