விநாயகர் சிலைகளை தயாரித்த 2 கடைகளுக்கு 'சீல்' வைப்பு

திருவாரூரில் ரசாயன கலவை மூலம் விநாயகர் சிலைகளை தயாரித்த 2 கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2023-09-15 18:45 GMT

திருவாரூரில் ரசாயன கலவை மூலம் விநாயகர் சிலைகளை தயாரித்த 2 கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி தமிழக அரசு சார்பில் ரசாயன கலவை இல்லாத இயற்கை பொருட்களை கொண்டு தாயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் மட்டுமே ஆற்றில் கரைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ரசாயன கலவை

எவ்வித ரசாயன கலவையற்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது என மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்திருந்தார்.

மேலும் ரசாயன கலவை உள்ள விநாயகர் சிலைகளை தயாரிக்கும் நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

வருவாய்த்துறையினர் ஆய்வு

இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டான் பகுதியில் செல்வம் மற்றும் கருப்பையா என்கிற இருவர் ரசாயன கலவை மூலம் விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்வதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் ரசாயனத்தை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் தயாரிப்பது தெரியவந்தது.

2 கடைகளுக்கு சீல் வைப்பு

இதனையடுத்து திருவாரூர் தாலுகா போலீசார் உதவியுடன் அந்த இரு கடைகளில் இருந்து 187 சிலைகளை விற்பனைக்தடை விதிக்கப்பட்டு, கடைகளுக்கு சீல் வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்