பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு `சீல்' வைப்பு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு `சீல்' வைக்கப்பட்டது
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அந்த அமைப்பின் அலுவலகங்களுக்கு `சீல்' வைக்கப்பட்டது.
இதேபோல் மேலப்பாளையத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கும் நேற்று `சீல்' வைக்கப்பட்டது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை, சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.