வேனில் கடத்திய கடல் குதிரைகள் பறிமுதல்
தேவிபட்டினத்தில் நடந்த வாகன சோதனையில் வேனில் கடத்தப்பட்ட 150 கிலோ கடல் அட்டைகள், கடல்குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர;
பனைக்குளம்,
தேவிபட்டினத்தில் நடந்த வாகன சோதனையில் வேனில் கடத்தப்பட்ட 150 கிலோ கடல் அட்டைகள், கடல்குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வாகன சோதனை
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் சோதனைச்சாவடியில் கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், கடலோர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேன் ஒன்றை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அதில் 8 சாக்கு பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 150 கிலோ கடல் அட்டைகள் மற்றும் 3 சாக்கு பைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட கடல் குதிரைகளும் இருப்பது தெரியவந்தது.
2 பேர் சிக்கினர்
இதை தொடர்ந்து கடல் அட்டை மற்றும் கடல் குதிரையை பறிமுதல் செய்த கடலோர போலீசார் அந்த ஆம்னி வேனை ஓட்டி வந்த கீழக்கரையைச் சேர்ந்த டிரைவர் உள்ளிட்ட 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இந்த கடல்அட்டை மற்றும் கடல் குதிரைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக வேனில் கொண்டு வந்திருக்கலாம் என கடலோர போலீசார் தெரிவித்தனர்.