தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

புதுக்கோட்டை அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2023-08-03 18:45 GMT

புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தல் யாதவர் தெருவை சேர்ந்தவர் மகராஜா என்ற மாயாண்டி (வயது 37). கூலித் தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள கோவில் திருவிழாவில் பங்கேற்றாராம். அப்போது, மகராஜாவுக்கும், முடிவைத்தானேந்தலை சேர்ந்த மாயாண்டி (24), பார்வதிராஜா, முத்துமாலை ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மகராஜா, முடிவைத்தானேந்தல் கீழத்தெருவை சேர்ந்த ஒலிமுத்து மகன் முத்துலட்சுமணன் (35) ஆகியோர் அந்த பகுதியில் உள்ள பலவேசம் கோவில் அருகே நின்று கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த மாயாண்டி, பார்வதிராஜா, முத்துமாலை ஆகிய 3 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி, செங்கலால் தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த மகராஜா சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். முத்துலட்சுமணன் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்