தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

வடக்கு விஜயநாராயணம் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2023-07-23 19:09 GMT

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள சவளைக்காரன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுடலை (வயது 28). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து (33) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலையில் சுடலை அங்குள்ள ஆலமரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அவரை, இசக்கிமுத்து வழிமறித்து அவதூறாக பேசி, அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சுடலை சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்