வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; விவசாயி கைது

களக்காடு அருகே வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-29 19:25 GMT

களக்காடு:

களக்காடு அருகே வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.

இளம்பெண்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள வி.கே.நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் வினுபிரியா (வயது 25). இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வருவதால் வினுபிரியா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் விவசாயியான ராமச்சந்திரன் மனைவி அசோகா. சம்பவத்தன்று அசோகா, வினுபிரியாவின் நடத்தை குறித்து அவதூறாக பேசினார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் கலைந்து சென்றனர். அதன் பின் அசோகாவின் கணவர் ராமச்சந்திரன், வினுபிரியாவின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தார். அங்கு இருந்த வினுபிரியாவுடன் தகராறில் ஈடுபட்டார்.

அரிவாள் வெட்டு

இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அரிவாளால் வினுபிரியாவை வெட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த வினுபிரியாவை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக களக்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடா்ந்து ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். அசோகாவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்