எண்ணற்ற சமூகநலத் திட்டங்களால் இன்றைய நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி கலைஞர்: முதல் அமைச்சர் டுவீட்

கலைஞரின் புகழைப் போற்றி, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து, நம் இயக்க இலக்குகளை அடைய உறுதியோடு அவர் வழி நடப்போம் என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-03 09:18 GMT

சென்னை,

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டரில் கூறி இருப்பதாவது;

"ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகம் சனாதனப் பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து உறுதியாய் எழுந்து நின்றது. இந்த மண்ணுக்கான - மக்களுக்கான திராவிட இயக்கம் தோன்றியது. புத்தர் முதல் வள்ளலார் வரை இந்த மண்ணில் விதைத்த புரட்சியின் அடித்தளத்தில் திராவிட இயக்கம் வேரூன்றியது.

அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் - பண்டித அயோத்திதாசர் - தாத்தா இரட்டைமலை சீனிவாசன் - பிட்டி தியாகராயர் - நடேசனார் - டி.எம்.நாயர் - ஏ.பி.பாத்ரோ - எம்.சி.இராஜா - பனகல் அரசர் - தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா எனத் தமிழினத்தின் இனமான - பகுத்தறிவு - சுயமரியாதை உணர்வைக் காத்திட உருவான தலைவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து - தலைமை தாங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்!

எண்ணற்ற சமூகநலத் திட்டங்களால் இன்றைய நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி அவர்!

தமிழ்நாட்டின் அடையாளமாக விளங்கும் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடங்கும் இந்நாளில், அவரது புகழைப் போற்றி, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து, நம் இயக்க இலக்குகளை அடைய உறுதியோடு அவர் வழி நடப்போம்!"

இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்