சொத்து தகராறில் மாணவருக்கு கத்திவெட்டு

குடியாத்தம் அருகே சொத்து தகராறில் மாணவரை கத்தியால் வெட்டிய அவரது தாத்தாவை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-10 14:34 GMT

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த போஜனாபுரம் அமினாபாதா பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 70). இவருக்கும் இவரது அண்ணன் மகன் முபாரக் என்பவருக்கும் சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. முபாரக்கின் மகன் முஷாரப் (20) குடியாத்தத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்களது கிராமத்தில் உள்ள மசூதியில் தொழுகைக்கு முஷாரப் சென்றுள்ளார். அப்போது மசூதிக்கு வந்த அவரது சின்ன தாத்தா இஸ்மாயில் முன்விரோதம் காரணமாக கத்தியால் முஷாரப்பின் தலைமையில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முஷாரப்பை உடனடியாக உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து இஸ்மாயிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்